search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோட்டா மாஸ்டர் கைது"

    • மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
    • மாணவியின் ஷேர்சாட் கணக்கு மூலம் ஒரு வாலிபர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

    மதுரை:

    இன்றைய நவீன காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை அளிக்கும் இணையதளம் வாழ்க்கையை சீரழிக்கும் பல வழிமுறைகளையும் கொண்டுள்ளது. இதில் சிக்கி மாணவ-மாணவிகள் படிப்பு உள்ளிட்ட தங்களது எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர்.

    மதுரையில் சமூக வலைதளங்களில் மூழ்கிய ஒரு மாணவியின் அப்பாவிதனத்தை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். பள்ளி முடிந்தவுடன் எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்த அந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

    கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் மாயமான மாணவி குறித்து விசாரணை நடத்த வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமாார் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாணவியின் வீட்டில் இருந்த அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    அப்போது மாணவியின் ஷேர்சாட் கணக்கு மூலம் ஒரு வாலிபர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள மேலவாத்தியம் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் (31) என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரித்ததில், மாயமான மாணவியை சரண்ராஜ் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குளித்தலை சென்ற போலீசார் இருவரையும் மதுரைக்கு அழைத்து வந்தனர். மாணவியிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    எனக்கு அப்பா இல்லை, அம்மா தான் வேலைக்கு சென்று படிக்க வைத்தார். அடிக்கடி ஷேர்சாட் பயன்படுத்தி வந்த எனக்கு அதன் மூலம் சரண்ராஜ் பழக்கமானார். அவர் பிரபல கம்பெனியில் அதிக சம்பளத்துடன் வேலை பார்ப்பதாக கூறினார். அதன் பின் நாங்கள் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் காதல் ஏற்பட்டது.

    அப்போது அவர் வீட்டை விட்டு என்னுடன் வந்து விடு, திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி நான் அவருடன் குளித்தலைக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு குளித்தலையில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்ப்பது தெரியவந்தது. அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பின் சரண்ராஜ் அவரது வீட்டில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இவ்வாறு அவர் போலீஸ் வாக்குமூலத்தில் மாணவி தெரிவித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை கைது செய்தனர்.

    • ஓட்டலில் வேலை செய்பவர்கள் அவர்கள் 8 தோசை சாப்பிட்டதாக கூறினர்.
    • புஞ்சை புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பிளியாம்பாவர் பாரதி (வயது 26). இவரது தம்பி சுதாகரன் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (22). இவர்கள் 3 பேரும் புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தனர். அவர்கள் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ஓட்டலில் வேலை செய்பவர்கள் அவர்கள் 8 தோசை சாப்பிட்டதாக கூறினர். அதற்கு அவர்கள் நாங்கள் 6 தோசை தான் சாப்பிட்டோம் என்று கூறினர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது ஓட்டல் உரிமையாளர் ராமசாமி, புரோட்டா மாஸ்டர் குமார் (40) மற்றும் ஓட்டலில் வேலை செய்யும் 2 பேர் ஆகியோர் சேர்ந்து பாரதி, சுதாகரன், சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் புரோட்டா மாஸ்டர் குமார் அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து அவர்களை தாக்கி உள்ளார்.

    இதில் பாரதி மற்றும் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பாரதி மற்றும் சுதாகரன் மீது தாக்குதல் நடத்திய புரோட்டா மாஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த குமார், ஓட்டல் உரிமையாளர் ராமசாமி மற்றும் ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் என தெரிய வந்தது.

    இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து புரோட்டா மாஸ்டர் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஓட்டல் உரிமையாளர் ராமசாமி மற்றும் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×